Monday, 10 August 2015

காவாய் பண்டிகை



காவாய் பண்டிகை

நம் நாட்டில் பல வகையான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. மாணவர்களே!  காவாய் பண்டிகையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? சரவாக் மாநில மக்கள் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் காவாயும் அடங்கும். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் திகதியில் இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது. சரவாக் மக்கள் இப்பண்டிகைக்கு முன்பு, பல வகையான ஏற்பாடுகள் செய்வார்கள். ‘லெமாங்செய்தல், இறந்தவர்களின் கல்லறைகளைச் சுத்தம் செய்தல் போன்ற ஏற்பாடுகள் ஆகும்.
பண்டிகை நாளன்று, அவர்களின் பண்பாட்டிற்கு ஏற்ற புதிய உடைகளை அணிவார்கள். மேலும், பல வண்ண மணிகள், வளையல்கள், பூ மாலைகள் போன்றவற்றால் தலை முதல் கால் வரை தங்களை அழங்கரித்துக் கொள்வார்கள். பண்டிகை விழாவில் கலந்து கொள்வார்கள். அவ்விழாவில் மத்தள ஓசையுடன்ஙாஜாட்எனும் நடனத்தையும் ஆண்கள் ஆடி மகிழ்வார்கள். குழுவாக அமர்ந்து பலவகை உணவை உண்டு பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.

2 comments:

  1. நன்றி. இஃது என் பாடத்திற்கு துனைபுரிந்தது

    ReplyDelete
  2. Titanium Gr 5 - Etixit
    These blades where is titanium found are very titanium easy flux 125 thin-walled and compact. The quality of these blades is excellent. Rating: 5 titanium plate · titanium road bike ‎6 reviews 2014 ford focus titanium hatchback · ‎$16.00 · ‎In stock

    ReplyDelete